Connect with us

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் : வெற்றிக்கு மிக அருகில் சென்றபோதும், காயத்தால் பறிபோன நிஷா தாஹியாவின் பதக்க கனவு..!!

Featured

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் : வெற்றிக்கு மிக அருகில் சென்றபோதும், காயத்தால் பறிபோன நிஷா தாஹியாவின் பதக்க கனவு..!!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் காலிறுதி போட்டியில் விளையாடிய இந்திய வீராங்கனை நிஷா தாஹியா அதிக புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக விளையாட முடியாமல் தோல்வியை தழுவி உள்ளார்.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒலிம்பிக் விளையாட்டு தொடர் இந்த முறை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது .

உலககெங்கும் இருக்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்நாள் கனவாக இருக்கும் இந்த ஒலிம்பிக் தொடரில் இம்முறை மொத்தம் 10,500 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

இந்நிலையில் மல்யுத்தம் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை நிஷா தாஹியா விளையாடினார் . ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடி வந்த தாஹியா 8 – 1 என முன்னிலையில் இருந்த நிலையில் அவருக்கு எதிர்பாராத விதமாக முழங்கையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து வலியால் துடித்த அவரை மருத்துவர்கள் பரிசோதித்த பின் மீண்டும் போட்டியில் தொடங்கியது . இருப்பினும் கடுமையான வலியுடன் துடித்தபடி விளையாடிய நிஷா தாஹியா 8-10 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார்.

ஒரு பக்கம் முழங்கை வலி மறுபக்கம் தோல்வியின் வலி தாங்க முடியாமல் நிஷா அழுதது, அங்கிருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெண் டிஎஸ்பி மீது நடத்தப்பட்ட தாக்குதல் - கடுமையான தண்டணை வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்..!!

More in Featured

To Top