Connect with us

போடு தகிட தகிட 7 பிலிம் ஃபேர் விருதுகளை வென்று குவித்த சித்தார்த்தின் `சித்தா’ திரைப்படம்..!!

Cinema News

போடு தகிட தகிட 7 பிலிம் ஃபேர் விருதுகளை வென்று குவித்த சித்தார்த்தின் `சித்தா’ திரைப்படம்..!!

நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா திரைப்படம் பிலிம் ஃபேர் விருது விழாவில் 7 விருதுகளை வென்று குவித்துள்ளது.

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த் . படங்களில் நடிப்பதை தாண்டி பாடல் எழுதுவதும் , பாடல் பாடுவதும் , படங்கள் தயாரிப்பதிலும் வல்லவராக நடிகர் சித்தார்த் வலம் வருகிறார்.

அந்தர்வாகியில் நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குள் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது .

இன்றைய காலத்திற்கு அனைவரும் அவசியம் தேறிக்கொள்ள வேண்டிய முக்கிய கதைக்கருவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கப்பட்டதே இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் .

அருண்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதையின் நாயகனாக சித்தார்த் நடிக்க அவருடன் இணைந்து நிமிஷா சஜயன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அப்போதே இப்படம் நிச்சயம் பல விருதுகளை வெல்லும் என பலரும் பாராட்டிய நிலையில் தற்போது பிலிம் ஃபேர் விருது விழாவில் சித்தா திரைப்படம் 7 விருதுகளை வென்று குவித்துள்ளது.

ஐதராபாத்தில் 69 ஆம் ஆண்டு தென் சோபா பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது . இந்த விழாவில் பல்வேறு திரையுலகை சேர்ந்து நடிகர் நடிகைகளின் படங்கள் நாமினேட் அங்கிருந்து ,

இதில் சித்தார்த்தின் சித்தா திரைப்படம் மொத்தம் 7 பில்ம் ஃபேர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது .

சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர்- சித்தார்த் , சிறந்த நடிகை- நிமிஷா சஜயன், சிறந்த குணச்சித்திர நடிகை – அஞ்சலி நாயர், சிறந்த பின்னணி பாடகி – கார்த்திகா வைத்தியநாதன் , சிறந்த இசை – திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாரயணன், சிறந்த இயக்குனர் – எஸ்.யூ அருண் குமார் உள்ளிட்ட பிரிவுகளில் சித்தா திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோட் படத்தின் Sneak Peek வீடியோ வெளியானது..!!

More in Cinema News

To Top