Connect with us

மோடியின் வாக்குறுதிக்கு கேரண்டியும் இல்லை… வாரண்டியும் இல்லை – பரப்புரையில் வெளுத்துவாங்கிய முதல்வர் ஸ்டாலின்

Featured

மோடியின் வாக்குறுதிக்கு கேரண்டியும் இல்லை… வாரண்டியும் இல்லை – பரப்புரையில் வெளுத்துவாங்கிய முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதிக்கு கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விருதுநகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் மக்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது :

சமூகநீதிக்கு ஆபத்தை உருவாக்கும் கட்சி, பாஜக; ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி படிக்கக்கூடாது என்று கூறுவது பாஜக; நமது உரிமைகளை பறிப்பது பாஜக; சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல; பெரும்பான்மையினருக்கும் எதிரி பாஜக

பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதிக்கு கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை; 15 லட்சம் வங்கிக் கணக்கில் போடுவோம் என்றார்; 15 ஆயிரம் போட்டாரா? அல்லது 15 ரூபாயாவது போட்டாரா?

பாஜக உடன் கூட்டணி இல்லை என நாடகம் போடுகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி;

பாஜக கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி

10 தொகுதிகளுக்கு நான் பயணம் செய்துள்ளேன்; எல்லா இடங்களிலும் மக்களிடம் மாபெரும் எழுச்சியை பார்க்கிறேன்; மக்களின் மனநிலையைப் பார்த்தால் திமுகவுக்கு 40/40 வெற்றி உறுதியாகிவிட்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கரூர் மரணங்கள்: "நாங்களும் ஆழ்ந்த மன வேதனையில் இருக்கிறோம்" – எஸ்.ஏ. சந்திரசேகர்

More in Featured

To Top