Connect with us

மைக்கேல் படம் வசூல் வேட்டை: முதல் வாரமே ₹2990 கோடி

Cinema News

மைக்கேல் படம் வசூல் வேட்டை: முதல் வாரமே ₹2990 கோடி

திரையுலகையே அதிர வைத்த வசூல் சாதனையுடன் “மைக்கேல்” திரைப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் புயலாக வீசிக் கொண்டிருக்கிறது. உலகப் புகழ் பெற்ற பாப் இசை நட்சத்திரமான Michael Jackson அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தை Antoine Fuqua இயக்கியுள்ளார்.

நாயகனாக Jaafar Jackson நடித்துள்ள இப்படத்திற்கு John Logan திரைக்கதை எழுதியுள்ளார். வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இப்படம், முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தற்போது கிடைத்த தகவலின்படி, வெளியான 7 நாட்களில் “மைக்கேல்” திரைப்படம் உலகளவில் ரூ. 2990 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேகத்தில் தொடர்ந்தால், வருகிற நாட்களில் மேலும் பெரிய சாதனைகள் படைக்கும் என்று சினிமா வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷை புகழ்ந்த மமிதா பைஜு! ‘கரா’ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

More in Cinema News

To Top