Connect with us

IPL 2024 : முட்டி மோதியும் பயனில்லை – SRH அணியிடம் பணிந்தது ஹர்டிக் பாண்டியாவின் MI அணி..!!!

Featured

IPL 2024 : முட்டி மோதியும் பயனில்லை – SRH அணியிடம் பணிந்தது ஹர்டிக் பாண்டியாவின் MI அணி..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை – ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணியும் – மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் – ட்ராவிஸ் ஹெட் இணை தொடக்கம் முதல் கெத்து காட்ட கூடவே அத்திரைடியான பாட்னர்ஷிப்பும் உருவானது .

ஆனால் தொடர்ந்து அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால் 11 ரன்களில் அவுட்டானார் . அடுத்து வந்த அபிஷேக் சர்மா , ஹெட்டுடன் கைகோர்த்து அதிரடி பார்ட்னர்ஷிப்பை அமைத்தார் .

வந்த நொடி முதல் அதிரடியில் மிரட்டிய ஹெட் 24 பந்துகளில் 62 ரன்கள் குவித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார் . மறுபக்கம் அதிரடி காட்டி வந்த அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 50 ரன்களை குவித்தார். ஆனால் அவரும் 63 ரன்களுடன் வெளியேறினார்.

அடுத்து வந்த எய்டன் மார்க்ரம் – ஹென்ரிச் கிளாசென் உடன் கூட்டணி அமைத்தார். ஒருபக்கம் ஹைதராபாத் பேட்டிங்கில் மிரட்ட மறுபக்கம் மும்பை திணறிக் கொண்டிருந்தது.

ஹென்ரிச் கிளாசென் கடந்த போட்டியில் எப்படி அதிரடியாக ஆடினாரோ இந்த போட்டியிலும் 34 பந்துகளில் 80 ரன்களை விளாசி ரசிகர்களையும் எதிரணியையும் மிரள வைத்தார் .

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 277 ரன்களை குவித்தது.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது . இதையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரராக களமிரனாகிய இளம் வீரர் இஷான் கிஷன் 13 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் . அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார் .

See also  சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி உறுதியா? ‘சீன்’ படத்தின் முதல் விமர்சனம் வெளியானது.. ஜெயிலர் 2 வசூலுக்கே சவாலா?

பின்னர் வந்த நமன் திர் மற்றும் திலக் வர்மா இணைந்து 84 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைக்க நமன் 30 ரன்களிலும், திலக் 64 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

முன்கள வீரர்கள் அனைவரும் வெளியேற மும்பை அணி இந்த இமாலய இழக்க ததுரத்த முடியாமல் தடுமாறியது . முடிந்த வரை போராடிய கேப்டன் ஹர்திக் 24 ரன்கள் எடுத்து வெளியேற அவருடன் வந்த டிம் டேவிட்டும் 42 ரன்களில் பெவிலியன் திரும்பினார் .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை அணி தனது தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன் மூலம் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது .

ஒரே போட்டியில் அபாரமான பல சாதனைகளை படைத்த SRH அணிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top