Connect with us

வருந்த மாட்டிங்களா திருந்த மாட்டிங்களா – ரவீனாவுக்கு உதவி பண்ண போய் நிக்சனிடம் சிக்கிய மணி – ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

வருந்த மாட்டிங்களா திருந்த மாட்டிங்களா – ரவீனாவுக்கு உதவி பண்ண போய் நிக்சனிடம் சிக்கிய மணி – ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள 2 வது ப்ரோமோ சற்று கார சாரமாக வந்துள்ளது .

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் சீசன் 7ல் இறுதி மேடையை அலங்கரிக்கப்போகும் இறுதி போட்டியாளர்களுக்கான TICKET TO FINALE டாஸ்க் நடைபெற உள்ளதாக பிக் பாஸ் அறிவிக்கிறார்.

இந்த டாஸ்கின் முதல் சுற்றில் போட்டியாளர்கள் அனைவர்க்கும் தங்க முயல் ஒன்று கொடுக்கப்படுகிறது .போட்டியாளர்கள் அனைவரும் அந்த முயலை சுற்றி கோட்டை ஒன்றை கட்ட வேண்டும் என கூறப்படுகிறது.இதையடுத்து போட்டியாளர்கள் அனைவரும் அந்த டாஸ்கை மும்மரமாக விளையாட ப்ரோமோ அப்படியே முடிகிறது.

இதையடுத்து தற்போது வந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் அந்த தங்க முயல் டாஸ்கை விளையாடுகின்றனர் . ஆனால் என்னவோ தெரியவில்லை திடீரென நிக்சன் மணியிடம் சென்று நீங்க உங்களுக்காக விளையாடுங்க ரவீனாவை ஜெயிக்க வைப்பதற்காக விளையாடாதீர்கள் உங்களால் எங்க கேம் பாதிக்கப்படுகிறது என கயோ முயயோ என கத்துகிறார் .

இதையடுத்து வழக்கம் போல் மணிக்கு சப்போர்ட் தினேஷும் ரவீனாவும் நிக்சனிடம் வாக்குவாதம் செய்ய அந்த ப்ரோமோ அப்படியே முடிகிறது . ஏற்கனவே அவரவர் அவரவர்களின் கேமை விளையாட சொல்லி அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மணி உண்மையில் ரவீணாவுக்கு உதவி செய்தாரா இல்லையா என்பதை நாம் இன்றைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top