Connect with us

சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்..!!

Featured

சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்..!!

மத்திய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் வழங்கப்படும் ‘சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது, திராவிட மாடல் அரசுக்குப் பெருமை என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

உலகின் முன்னோடி இனமான பழந்தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கும் கீழடியில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்

அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ரூ. 18.8 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.

பழந்தமிழ் சமூகத்தின் முற்போக்கு சிந்தனைகள் பொருந்திய ஏறத்தாழ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியகத்தை உள்ளம் குளிர கண்டு களிக்கின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் வழங்கப்படும் ‘சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது, திராவிட மாடல் அரசுக்குப் பெருமை! என தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிறப்பாக நடைபெற்று முடிந்த தளபதி 69 படத்தின் பூஜை - வைரல் போட்டோஸ்..!!

More in Featured

To Top