Connect with us

பக்காவான ஆக்சன் பாக்க தயாரா – ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Cinema News

பக்காவான ஆக்சன் பாக்க தயாரா – ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி உள்ள தேவரா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஆக்சன் படங்களுக்கு பெயர்போன இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படமே தான் தேவரா.

கொரட்டலா சிவா இயக்கத்தில் தயாராகி உள்ள இப்படத்தில் . ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துவருகிறார்.

இதுநாள் வரை வெறும் பாலிவுட் படங்களில் நடித்து வந்த ஜான்வி தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக தனது கால் தடத்தை பதித்துள்ளார் .

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஜான்வியுடன் சென்ற்து பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

ராக் ஸ்டார் அனிருத் இசைமைக்கும் இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது .

அதன்படி இப்படம் வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறக்கும் ஜூனியர் என்டிஆரின் படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன நிலையில் தேவரா படமும் அவரது ஹிட் லிஸ்டில் இடம்பெறுமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Bigg Boss Tamil 10: ஜேசனை அதிரவைத்த ரம்யா கிருஷ்ணன்! குறும்படத்தால் மாறிய காட்சிகள்.. முதல் நாளிலேயே அதிரடி காட்டிய தொகுப்பாளர்!

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top