Connect with us

IPL 2024 : முதல் வெற்றியை பெறப்போவது யார்..? மும்பை – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்..!!

Featured

IPL 2024 : முதல் வெற்றியை பெறப்போவது யார்..? மும்பை – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை – ஹைதராபாத் அணிகளை பலப்பரீட்சை நடத்த உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் ஹைதராபாத் அணியும் – மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

நடப்பது தொடரில் குஜராத் அணியை எதிர்கொண்ட மும்பை அணி இறுதிவரை போராடி தோல்வியை சந்தித்தது.

இதுபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் கொல்கத்தா அணியை எதிர்கொண்ட ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடிய போதிலும் இறுதி நேரத்தில் செய்த தவறால் வெற்றியை நழுவவிட்டது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி முதல் வெற்றியை பெற போகிறது எந்த அணி இரண்டாவது தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? இல்லை, கல்லறைக்குள் சென்று விட்டதா??? - அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்

More in Featured

To Top