Connect with us

“தகர்ந்தது ஒலிம்பிக் பதக்க கனவு” மல்யுத்த இறுதிப்போட்டியில் விளையாட இருந்த வினேஷ் போகத் ‘திடீர்’ தகுதி நீக்கம்..!!

Featured

“தகர்ந்தது ஒலிம்பிக் பதக்க கனவு” மல்யுத்த இறுதிப்போட்டியில் விளையாட இருந்த வினேஷ் போகத் ‘திடீர்’ தகுதி நீக்கம்..!!

ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்திருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தின் இறுதிப் போட்டியில் விளையாட இருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.

ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் கூறிக்கொள்கிறோம்.

நேற்று மாலை 2 கிலோ கூடுதலாக உடல் எடை இருந்த நிலையில், இரவு முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் விடிய விடிய உடற்பயிற்சி செய்தார் வினேஷ் இவ்வளவு செய்தும் காலையில் சுமார் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாகக் கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நேரத்தில் வேறு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. வினேஷ் போகத்தின் தனியுரிமைக்கு மரியாதை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மம்மூட்டி நடிப்பில் கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!

More in Featured

To Top