Connect with us

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய அணி..!!

Featured

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய அணி..!!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி தனது அபார ஆட்டத்தால் ஸ்பெயினை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை பெற்று அசத்தியுள்ளது.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது .

மொத்தம் 10,500 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 100க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர் .

இந்நிலையில் அனல் பறக்க நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இன்று ஆடவர் ஹாக்கி போட்டி நடைபெற்றது வெண்கலப் பதக்கத்திற்கான இந்த போட்டியில் இந்தியா ஸ்பெயின் அணிகள் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இந்திய அணி வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி ஒலிம்பிக்ஸ் ஹாக்கியில் தனது 13வது பதக்கத்தை இந்திய அணி பெறுகிறது . 1928 முதல் 2024 வரை 8 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top