Connect with us

ரிங்கு சிங் தடாலடி ஆட்டம் : ஆஸ்திரேலியாவுக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி..!!

Featured

ரிங்கு சிங் தடாலடி ஆட்டம் : ஆஸ்திரேலியாவுக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி..!!

இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 4வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 174 ரன்கள் குவித்துள்ளது.

5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் நடைபெற்று முடிந்த நிலையில் 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி தற்போது முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டி20 கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது . இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் களமிறங்கினர் . இதில் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 37 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுக்க பின்னர் வந்த கேப்டன் சூர்யாவும் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்ததால் மைதானமே மாயான அமைதியில் இருந்தது .

இதையடுத்து இளம் வீரர் ரிங்கு சிங்குடன் ருத்துராஜ் ஜோடி சேர்ந்தனர் .இருவரும் அதிரடியில் மிரட்ட ரன்களும் மளமளவென ஏறியது. சிறப்பாக விளையாடி வந்த ருத்துராஜ் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார் அவரை தொடர்ந்து வந்த ஜிதிஷ் ரிங்கு உடன் கைகோர்த்து அதிரடியில் மிரட்டினார் . இருவரும் அரசி சதம் கடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் கடைசி நேரத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது . இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top