Connect with us

டி20 உலக கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய வீரர்கள் – பிசிசிஐ வெளியிட்ட க்யூட் வீடியோ..!!

Featured

டி20 உலக கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய வீரர்கள் – பிசிசிஐ வெளியிட்ட க்யூட் வீடியோ..!!

பர்படாஸில் புயல் மழையால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்த இந்திய வீரர்கள் இன்று உலக கோப்பையுடன் தாயகம் திரும்பி உள்ளனர்.

கிரிக்கெட் வெறியர்களின் முரட்டுத்தனமான ஆதரவுக்கிடையே 20 அணிகள் வீரர்களின் கோப்பை கனவுடன் விறுவிறுப்பாக நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மட்டுமே இறுதி வரை போராடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

கடந்த மாத இறுதியில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடிய இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது .

இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதையடுத்து நாடே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில் பர்படாஸில் ஏற்பட்ட புயல் மழையால் இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப முடியாமல் திணறி வந்தனர்.

இந்நிலையக்ள் இன்று தனி விமானம் மூலம் இந்திய அணி தாயகம் திரும்பியுள்ளது . முதல் கட்டமாக டெல்லி வந்து இறங்கிய இந்திய அணிக்கு ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதுமட்டுமின்றி இந்திய அணி தாயகம் திரும்பியதை தெரிவிக்கும் வகையில் பிசிசிஐ ஒரு க்யூட் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top