Connect with us

ஜெயிச்சுட்டோம் மாறா : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை வென்றது இந்தியா..!!

Featured

ஜெயிச்சுட்டோம் மாறா : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை வென்றது இந்தியா..!!

இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை சூரியம்குமாரின் இளம்படை கெத்தாக வென்று வசதியுள்ளது.

5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன இந்தியாவில் உள்ள மைதானங்களில் இப்பபோட்டிகள் நடைபெற்று வருகின்றது .

இந்நிலையில் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டி20 கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது . இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் களமிறங்கினர் . இதில் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 37 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுக்க பின்னர் வந்த கேப்டன் சூர்யாவும் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்ததால் மைதானமே மாயான அமைதியில் இருந்தது .

இதையடுத்து இளம் வீரர் ரிங்கு சிங்குடன் ருத்துராஜ் ஜோடி சேர்ந்தனர் .இருவரும் அதிரடியில் மிரட்ட ரன்களும் மளமளவென ஏறியது. சிறப்பாக விளையாடி வந்த ருத்துராஜ் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார் அவரை தொடர்ந்து வந்த ஜிதிஷ் ரிங்கு உடன் கைகோர்த்து அதிரடியில் மிரட்டினார் . இருவரும் அரசி சதம் கடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் கடைசி நேரத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது . இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது.

ஆரம்பம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலியா வீரர்கள் ரன் குவிப்பதில் சிரமப்பட்டனர் . அவ்வபோது பவுண்டரிகளும் சிஸ்சர்களும் வந்தாலும் அவையனைத்தும் இலக்கை கடக்க கைகொடுக்க முடியவில்லை .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது.இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரையும் கைப்பற்றியது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  KGF புகழ் யஷ் முதல் கேரளத்து க்ளாஸிக் நாயகன் ஃபஹத் வரை : பிரபலங்கள் வாக்களித்த வைரல் போட்டோஸ்..!!!

More in Featured

To Top