Connect with us

“இன்னும் 20 ஆண்டுகளில் IPL போட்டிகளுக்கான ஊடக உரிமம் ரூ.4 லட்சம் கோடியாக உயர்ந்திடும்!”

IPL

“இன்னும் 20 ஆண்டுகளில் IPL போட்டிகளுக்கான ஊடக உரிமம் ரூ.4 லட்சம் கோடியாக உயர்ந்திடும்!”

இந்தியாவில் ஆண்டுக்கு ஒருமுறை IPL கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ரசிகர்களிடையே IPL மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மிகப் பெரும் விளம்பர வருவாயை ஈட்டக்கூடியதாக அது உள்ளது.

இதனால், IPL போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமம் பெறுவதில் ஊடகங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், 2043-ம் ஆண்டு IPL போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு 50 பில்லியன் டாலரைத் தொடும் என்று எதிர்பார்ப்பதாக அருண் துமால் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் IPL உரிம மதிப்பு 6.2 பில்லியன் டாலரை (ரூ.51 ஆயிரம் கோடி) தொடும் என்று மதிப்பிடப்படுகிறது.

உலக அளவில், ஊடக உரிம மதிப்பின் அடிப்படையில் IPL 2-ம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் நேஷனல் புட்பால் லீக் (NFL) உள்ளது. அதன் ஊடக உரிம மதிப்பு 110 பில்லியன் டாலர் (ரூ.9.13 லட்சம் கோடி) ஆகும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இணையத்தை கலக்கும் நடிகர் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ட்ரெய்லர்..!!

More in IPL

To Top