Connect with us

தேசிய கொடியை ஏந்திச் செல்லும் ஸ்ரீஜேஷ் – இந்திய ஒலிம்பிக் சங்கம் கொடுத்த மாபெரும் கவுரவம்..!!

Featured

தேசிய கொடியை ஏந்திச் செல்லும் ஸ்ரீஜேஷ் – இந்திய ஒலிம்பிக் சங்கம் கொடுத்த மாபெரும் கவுரவம்..!!

பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் தேசிய கொடியை ஏந்திச் செல்ல உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் நேற்று ஆடவர் ஹாக்கி போட்டி நடைபெற்றது . வெண்கலப் பதக்கத்திற்கான இந்த போட்டியில் இந்தியா – ஸ்பெயின் அணிகள் மோதியது.

அனல் பறக்க நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தியது .

இதன்மூலம் ஒலிம்பிக்ஸ் ஹாக்கியில் தனது 13வது பதக்கத்தை இந்திய அணி பெறுகிறது . 1928 முதல் 2024 வரை 8 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இதையடுத்து தாய் நாட்டிற்காக தனது கடமையை இனிதே செய்து வந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் தனது ஓய்வை அறிவித்தார் . தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் .

இந்நிலையில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அவர்களை கவுரவிக்கும் விதமாக பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் நாட்டின் தேசிய கொடியை ஸ்ரீஜேஷ் ஏந்திச் செல்ல உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே மனு பாக்கர் தேசிய கொடியை ஏந்திச்செல்லும் நிலையில் அதில் ஸ்ரீஜேஷும் இணைந்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தீபாவளிக்கு ஒன்றாக களமிறங்கும் அமரன் - Bloody Beggar - வெளியான தாறுமாறு தகவல்..!!

More in Featured

To Top