Connect with us

“ஹ்ரித்திக் ரோஷனின் ‘Fighter’ பட Trailer வெளியாகி வைரல்!”

Cinema News

“ஹ்ரித்திக் ரோஷனின் ‘Fighter’ பட Trailer வெளியாகி வைரல்!”

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘ஃபைட்டர்’. ‘வார்’, ‘பதான்’ படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை விஷால் சேகர் இசையமைக்கிறார்.

ரூ.250 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் ஜன.26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விமானப் படையில் துடிப்பான விமானியாக வலம் வருகிறார் ஹ்ரித்திக் ரோஷன்.

‘ஃபைட்டர் என்பவன் தன் இலக்குகளை அடைபவன் மட்டுமல்ல.. மாறாக அதனை இரண்டாக தகர்ப்பவன்’ என்னும் வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லர், தேசபக்தி, காதல், கூஸ்பம்ப்ஸ் சாகச காட்சிகள் என செல்கிறது. 2019ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா சார்பில் கொடுக்கப்பட்ட பதிலடியை இப்படம் பேசுகிறது.

மயிர்க்கூச்செரியும் வசனங்கள், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என டெம்ப்ளேட் ஆன சில விஷயங்கள் இடம்பெற்றிருந்தாலும், மேக்கிங் மிரட்டலாகவே இருப்பதாக தெரிகிறது. ‘நீங்கள் காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கலாம், ஆனால் அதன் உண்மையான ராஜா நாங்கள் தான்’ போன்ற வசனங்களும் கவனம் பெறுகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வொன்றும் ஒவ்வரு ரகம் : பந்துவீச்சில் கலக்கிய SRH - LSG அணி 165 ரன்கள் குவிப்பு..!!

More in Cinema News

To Top