Connect with us

அயலானுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்..!!

Cinema News

அயலானுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்..!!

பொங்கல் பண்டிகையான இன்று சிவகார்த்திகேயனின் ஜாலியான நடிப்பில் வெளியான அயலான் படத்தின் ஏலியன் மற்றும் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ள புகைப்படம் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எஸ்.கே.வின் நடிப்பில் உருவான அயலான் படம் கடந்த 12 ஆம் தேதி உலகம் முழுவதும் இல்ல திரையரங்குகளில் கோலாகலமான வெளியானது.

இப்படம் வெளியான நாள் முதல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். பல வருட போராட்டத்திற்கு பின் திரைக்கு வந்து வெற்றிகண்டுள்ளதால் அயலான் படக்குழு தற்போது செம குஷியில் , இருந்து வருகின்றனர்.

சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இவர்களுடன் யோகி பாபு , கருணாகரன் , பால சரவணன் ,பானுபிரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பொங்கல் திருநாளுக்கு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதுமட்டுமின்றி அயலான் பட ஸ்டைலில் ஏலியனுடன் அமர்ந்திருப்பது போல தனது குடும்பத்துடன் அழகிய புகைப்படத்தையும் எஸ்.கே பகிர்ந்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் விஷாலுக்கு மீண்டும் ஒரு தோல்வி படமா ..? - அதிர்ச்சி அளிக்கும் ரத்னம் படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம்

More in Cinema News

To Top