Connect with us

கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க – “லால் சலாம்” படத்தின் புதிய பாடல் வெளியீடு..!!

Cinema News

கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க – “லால் சலாம்” படத்தின் புதிய பாடல் வெளியீடு..!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மிரம்மாண்டமாக உருவாகி உள்ள லால்சலாம் படத்தின் புதிய பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடைத்துளள்னர் .

தனது மகளின் ஆசைக்காக மொய்தீன் பாய் எனும் கவுரவ கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்துள்ளார் . இதுமட்டுமின்றி இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவ்வும் நடித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைய தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் புதிய பாடலான ஹி புள்ள என்ற பாடலை தான் படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் இல்ல திரையரங்குகளில் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top