Connect with us

பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு மணி பேசும் வீடியோவிற்கு, நடிகர் ஹரிஷ் கல்யாண் Reaction!

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு மணி பேசும் வீடியோவிற்கு, நடிகர் ஹரிஷ் கல்யாண் Reaction!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஷ்ணு, மணியுடன் பேசுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த வீடியோவுக்கு ஷ்ஷ்…யப்பா முடியலடா.. என்று ஹரிஷ் கல்யாண் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தார்.

அப்போது அவர் வைத்த டாஸ்க்கில் ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் வென்ற நிலையில் அவர்களுக்கு தன்னிடம் உள்ள கோல்ட் ஸ்டாரை கொடுத்தார். இந்த நிலையில் விஷ்ணு மணியிடம் இதுகுறித்து கூறிய போது ஹரிஷ் கல்யாண் தனது நெருங்கிய நண்பர் என்றும் அதனால்தான் அந்த கோல்ட் ஸ்டாரை என்னிடம் கொடுத்தார் என்றும் அவர் கூறினார்.

இதை மணி நம்பாதது போல் கேட்டுக் கொண்டிருந்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ஷ்ஷ்…யப்பா முடியலடா.. என்று ஹரிஷ் கல்யாண் பதிவு செய்துள்ளார். விஷ்ணு ஆரம்பத்தில் புத்திசாலித்தனமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் கோமாளித்தனமாக விளையாடி வருகிறார்.

தன்னை டைட்டில் வின்னர் என்றும் வில்லன் என்றும் அவரே தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் என்னுடைய நண்பர் என்று விஷ்ணு கூறிய நிலையில் ‘இது ஹரிஷ் கல்யாணுக்கு தெரியுமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிய நிலையில் இந்த பதிவுக்கு தான் ஹரிஷ் கல்யாண் தனது காமெடி பதிவை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top