Connect with us

“ஹரிஷ் கல்யாண், MS பாஸ்கர் இணைந்து நடித்த ‘Parking’ படத்தின் விமர்சனம் இதோ..!

Movie Reviews

“ஹரிஷ் கல்யாண், MS பாஸ்கர் இணைந்து நடித்த ‘Parking’ படத்தின் விமர்சனம் இதோ..!

ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் இருவருக்குள்ளும் இருக்கும் சுயநலமும், ஈகோ எனும் அரக்கனும் எட்டிப் பார்க்க படம் பற்றிக் கொள்கிறது. பார்க்கிங் என டைட்டில் இருந்து சொல்ல வந்த கதையை நச்சென சொல்லி முடித்தாரா? இல்லையா? என்கிற முழுமையான விமர்சனத்தை பார்க்கலாம்.. ITயில் வேலை செய்யும் ஹேண்ட்ஸம் பாய் ஹரிஷ் கல்யாண். ஒரு வீட்டுக்கு மாடியில் குடியேறுகிறார். அந்த வீட்டின் கீழ் போர்ஷனில் அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபராக எம்.எஸ். பாஸ்கர் உள்ளார்.

தனது மனைவியை மருத்துவமனை செக்கப்புக்கு எல்லாம் கொண்டு செல்ல கார் வாங்கினால் நல்லா இருக்கும் என நினைக்கும் ஹரிஷ் கல்யாண் கார் வாங்குகிறார். அந்த காரை வீட்டின் கீழ் போர்ஷனுக்கு முன்னர் பார்க் செய்கிறார். அதுவரை அந்த இடத்தில் ராஜா போல இருந்த எம்.எஸ். பாஸ்கரின் இரு சக்கர வாகனத்துக்கு இப்போ இடம் ரொம்பவே சிரமமாக அமைந்து விட்ட சூழ்நிலையில், இருவருக்கும் இடையே சண்டை நடக்கிறது. பைக்கையே அங்கே பார்க் செய்ய முடியாத நிலையில், போட்டிக்கு எம்.எஸ். பாஸ்கரும் கார் வாங்குகிறார்.

இருவரும் அந்த ஒரு வீட்டின் முன் பக்க பார்க்கிங்கிற்காக அடித்துக் கொள்ளும் சுயநலம் பொங்கி வழியும் கதையை அழகாகவும் ரசிக்கும்படியும் விறுவிறுப்பாகவும் கொடுத்து மொத்த படத்தையும் பார்க்க வைத்து விடுகிறார். ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் இருவரும் தங்கள் சுயநலம், ஈகோ, பொறாமை, கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் ஒட்டுமொத்தமாக கொட்டித் தீர்த்து நடித்துள்ளனர். எல்ஜிஎம் படம் கைகொடுக்காத நிலையில், பார்க்கிங் படத்துக்கு தீவிரம் காட்டி நடித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண். சாம் சி.எஸ் பின்னணி இசை பக்காவாக அமைந்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்து ஏரியாக்களும் தங்கள் பணியை கச்சிதமாக செய்துள்ளனர்.

சாதாரண பார்க்கிங் எல்லாம் ஒரு பிரச்சனையா? என நினைக்க விடாமல் மனித மனத்தின் வக்கிரம், சுயநலம், ஆசை நம்மை என்னவெல்லாம் பாடாய்ப்படுத்தும் பிறருக்கு நம்மால் நிகழும் துன்பம் என்ன என்பதை தெளிவாக காட்டியிருப்பது தான் இந்த படத்தின் ஹைலைட். முதல் பாதியை கடந்து இரண்டாம் பாதியில் சில இடங்களில் படம் தொய்வை சந்திக்கின்றன. நாயகி இந்துஜாவுக்கு இன்னமும் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம். மீண்டும் கிளைமேக்ஸ் நெருங்கும் இடத்தில் பிக்கப் ஆகி படம் கச்சிதமாக நிறைவடைந்து விடுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ்‌இல் வெடித்த முதல் வெடி! – திவாகர், கெமி இடையே கடும் வாக்குவாதம்!

More in Movie Reviews

To Top