Connect with us

“எப்படி இருக்கு ரன்பிர் கபூரின் ‘Animal’ படம்! படத்தின் விமர்சனம் இதோ.!”

Movie Reviews

“எப்படி இருக்கு ரன்பிர் கபூரின் ‘Animal’ படம்! படத்தின் விமர்சனம் இதோ.!”

அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் (அர்ஜுன் ரெட்டி இந்தி ரீமேக்) படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் சுமார் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் பெரிய ரயில் பயணம் போல ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த விஷயமே படத்துக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்கக்ப்பட்ட நிலையில், மேலும், பல குறைகள் இருப்பதாக ரசிகர்கள் ரவுண்டு கட்டி அடித்து வருகின்றனர்.

இந்திய சினிமாவே கண்டிராத மிகப்பெரிய ஆக்‌ஷன் பிளாக் காட்சி இடைவேளைக்கு முன்பான அரை மணி நேர காட்சியில் காட்டி சும்மா தெறிக்கவிட்டுள்ளார் சந்தீப் ரெட்டி வங்கா என இந்த ரசிகர் படத்தை பாராட்டி உள்ளார். கைதி, விக்ரம், KGF 2, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை போலவே ஹீரோ தனியாளாக இந்த படத்திலும் பெரிய துப்பாக்கியை வைத்து எதிரிகளை சும்மா கொசு அடிப்பது போல சுட்டு வீழ்த்துகிறார்.

ஆனால், அந்த இடைவேளை காட்சியை தவிர படம் முழுக்க வேறு எதுவுமே இல்லை என்றும் ஸ்ட்ரிக்ட்லி ஆவரேஜ் படம் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் போட்டு பொளந்து வருகின்றனர். பெரும் பில்டப் கொடுக்கப்பட்ட அனிமல் படம் அவ்ளோ தான் பாஸ் என எண்ட் கார்டு போட பலரும் நெகட்டிவ் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர். ரன்பீர் கபூர் தனது ஒட்டுமொத்த உசுரையும் கொடுத்து நடித்திருக்கிறார். பல இடங்களில் படம் அர்ஜுன் ரெட்டியை ரன்பீர் கபூர் வெர்ஷனில் பார்த்தது போலவே இருக்கிறது.

அப்பா – மகன் கதையை வைத்துக் கொண்டு ஒரு குழந்தை முரடனாக எப்படி மாறுகிறான் என்கிற திரைக்கதையை அமைத்து சந்தீப் ரெட்டி வங்கா தேவையில்லாத பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சிகளை புகுத்தி படத்தை ஸ்பாயில் செய்து விட்டதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ரன்பீர் கபூர், சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் எப்படி இருக்கிறது என்கிற கேள்விக்கு, கரண் ஜோஹரின் கபி குஷி கபி கம் படத்தின் அடல்ட் வெர்ஷன் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனி ஆளாக போராடிய ருதுராஜ் - பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்கு..!!!

More in Movie Reviews

To Top