Connect with us

ஒரே காரில் வந்த ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி – நீதிமன்றத்தில் என்ன நடந்தது..

Featured

ஒரே காரில் வந்த ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி – நீதிமன்றத்தில் என்ன நடந்தது..

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி, காதலித்து திருமணம் செய்து பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த வருடம் விவாகரத்தை அறிவித்தனர்.

அவர்கள் பிரிவதாக அறிவித்தாலும், கான்செர்ட்களிலோ அல்லது இசை நிகழ்ச்சிகளிலோ ஒன்றாக பாடி வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அந்த விஷயத்தை பற்றி கேட்டபோது, “நாங்கள் ரொம்ப professional. ஒருவருக்கொருவர் மீது மரியாதையும் இருக்கிறது. அந்த மரியாதைக்காக தான் நாங்கள் ஒன்றாக பணியாற்றுகிறோம்” என்று கூறினார் ஜி.வி. பிரகாஷ்.

இந்நிலையில், அவர்களது விவாகரத்து வழக்கு இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் ஒரே காரில் கோர்ட்டுக்கு வந்தனர். பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்புவதாக நீதிபதியிடம் அவர்கள் கூறிய நிலையில், விசாரணை முடிந்து, ஒன்றாக காரில் ஏறி கிளம்பி சென்றனர். அவர்களது விவாகரத்து வழக்கு பார்த்து, ஜோடியாக வந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  குட் பேட் அக்லி: அஜித்தின் படம் பாக்ஸ் ஆபிஸில் அதிரடி!

More in Featured

To Top