Connect with us

LSG vs DC: கோயங்காவின் பழைய பாவம் பண்ட்டையும் வட்டமிடும்! ராகுலுக்கே கொடுத்த டிரிட்மென்ட்

Featured

LSG vs DC: கோயங்காவின் பழைய பாவம் பண்ட்டையும் வட்டமிடும்! ராகுலுக்கே கொடுத்த டிரிட்மென்ட்

விசாகப்பட்டினம்: ஐபிஎல் 2025 சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் பதவியேற்றார். இதற்கு முன்பு அந்த அணியை வழிநடத்திய கே. எல். ராகுலும், உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவும் கருத்து வேறுபாடு கொண்டதால், ராகுல் அணியை விட்டு விலகினார். கடந்த ஐபிஎல் சீசனில் தோல்வியைத் தொடர்ந்து கோயங்கா ராகுலிடம் கடுமையாக விமர்சனம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், 2025 மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்டை அணியில் சேர்த்த கோயங்கா, வெற்றிக்காக போராடும் கேப்டன் என்பதை நாங்கள் தேர்வு செய்துள்ளதாக ராகுலுக்கு ஒரு நேரடி பதிலடி கொடுத்தார். இதனால் அவர் மீண்டும் ரசிகர்கள் விமர்சனத்திற்கு ஆளாகினார்.

நடப்பு சீசனின் முதல் போட்டியில் லக்னோ அணி டெல்லியை எதிர்கொண்டது. இதில், ரிஷப் பண்ட் சொதப்பி 6 பந்துகளில் டக்அவுட் ஆனார். ஆனால் மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி, லக்னோ அணி 209 ரன்கள் குவித்தது. டெல்லி அணியின் பதிலடி ஆரம்பத்தில் தடுக்கப்பட்டாலும், ஆசுதோஷ் சர்மா, விப்ராஜ் நீகம் ஆகியோர் அதிரடி காட்டி, 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தனர்.

போட்டியில் பண்ட் எடுத்த தவறுகள் பரபரப்பை ஏற்படுத்தின. கடைசி இரண்டு ஓவருக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு பதிலாக, இளம் வீரர் பிரின்ஸ் யாதவிடம் பந்து கொடுத்தார். 19வது ஓவரில் 16 ரன்கள் கொடுக்கப்பட்டதால், கடைசி ஓவருக்கு வெறும் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

போட்டி முடிந்ததும், கோயங்கா மீண்டும் பழைய போக்கை தொடர்ந்து, பண்ட் மற்றும் பயிற்சியாளர் லாங்கரை அனைவரும் முன்பாக கடுமையாக விமர்சித்தார். இதை பார்த்த ரசிகர்கள், “இவர் இன்னும் திருந்தவில்லை” என கோபமாக விமர்சிக்கின்றனர். கேப்டன் பதவியில் உள்ள ஒருவரை இவ்வாறு தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவது தவறாகும் எனவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் வெளிப்படுகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  38 வயதில் சமந்தாவின் சொத்துக்களின் அளவு என்ன தெரியுமா?
Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top