Connect with us

குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதான்..

Featured

குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதான்..

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “குட் பேட் அக்லி”. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். “விடாமுயற்சி” படத்தை தொடர்ந்து இப்படத்திலும் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

இப்போது, இம்மாதம் இறுதியில் இப்படத்தின் டிரைலர் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் முதல் பாடல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவருமென கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து, “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு அச்சமற்ற டான், தனது குடும்பத்துடன் சமூகத்தில் நிம்மதியாக வாழ, தனது இரக்கமற்ற வழிகளையும் வன்முறை வாழ்க்கையையும் மாற்ற முயற்சிக்கிறார். ஆனால், அவரது இருண்ட கடந்த காலமும், மிருகத்தனமான செயல்களும் அவனை பின்தொடர்கின்றன. அவர் அவற்றை நேருக்கு நேர் சந்தித்து, அவற்றை எதிர்கொள்கிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதே “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் கதை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது – 8 நாட்களில் உலகளவில் கோடி கணக்கில் வசூல்!

More in Featured

To Top