Connect with us

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பேற்றது குறித்து சுப்மன் கில் நெகிழ்ச்சி பதிவு – குவியும் வாழ்த்துக்கள்

Featured

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பேற்றது குறித்து சுப்மன் கில் நெகிழ்ச்சி பதிவு – குவியும் வாழ்த்துக்கள்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக குஜராத் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இளம் வீரர் சுப்மன் கில் போட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் தங்கள் அணியின் சில வீரர்களை விடுவித்து கொள்ளவும் சில வீரர்களை தக்கவைத்து கொள்ளவும் அனைத்து அணிகளுக்கும் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களின் பெயர்களை தற்போது ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டு வருகின்றன .

அந்தவகையில் தற்போது நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடருக்காக குஜராத் டைட்டன்ஸ் அணி தக்கவைத்துள்ள வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டதுடன் அந்த அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லை நியமித்துள்ளதாகவும் அறிவித்தது.

ஹர்டிக் பாண்டியா தலைமையில் களமிறங்கி 2 ஐபிஎல் தொடர்களை சந்தித்த குஜராத் அணி 1 முறை கோப்பையை வென்றுள்ளது .

இந்நிலையில் இளம் புலி சுப்மன் கில்லின் தலைமையில் களம் காண உள்ள குஜராத் அணி நடப்பு தொடரில் கோப்பையை வெல்லுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top