Connect with us

அவ்ளோதான் எல்லாத்தையும் மறந்துவிடுங்கள் – ரவீனாவின் பேச்சால் கலங்கிய மணி..!!

Bigg Boss Tamil Season 7

அவ்ளோதான் எல்லாத்தையும் மறந்துவிடுங்கள் – ரவீனாவின் பேச்சால் கலங்கிய மணி..!!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் தருவாயால் மீண்டும் ரி என்ட்ரி கொடுத்துள்ள ரவீனா மணியிடம் மனம் விட்டு பேசும் ப்ரோமோ வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

100 நாட்களுக்கு மேல் அனல் பறக்க தீயாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கும் நிலையிலும் போட்டியாளர்கள் மனதில் இன்னும் சில வன்மங்கள் தீக்குழம்பாய் கொந்தளித்துக்கொண்டு தான் இருக்கிறது .

இந்நிலையில் கடந்த சீசன்களை போல் இந்த சீசனிலும் நடைபெற்ற மிட் வீக் எவிக்சனில் சிறப்பாக விளையாடிய விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டார். அதன்படி பிக் பாஸ் டைட்டில் ரேஸில் தற்போது மாயா , அர்ச்சனா ,விஷ்ணு ,தினேஷ் மற்றும் மணி ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள புதிய ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள சுட்டி குழந்தை ரவீனா மணியை தனியாக அழைத்துக்கொண்டு மனம் விட்டு பேசுகிறார்.

அப்போது மணி என்னால முடியல நான் ஒரு தடவை ஒத்துக்கிட்டன திரும்பி அந்த பக்கம் போகமாட்டேன் என்பது போல் சொலிக்கிறார் . உடனே ரவீனா நான் என செய்தேன் என்று பாவமாக கேட்கிறார்.

பிறகு எல்லாத்தையும் மறந்துருங்க மணி வெளில உங்கள்ட பேச வேண்டியது நிறைய இருக்கு என்று சொல்ல பதிலுக்கு எனக்கு தான் நிறையா இருக்கு என்று சொல்லி அங்கிருந்து மணி நகர்ந்து செல்ல அந்த ப்ரோமோவும் அப்படியே முடிகிறது .

இந்நிலையில் பரபரப்பான இறுதி கட்டத்தில் போட்டியாளர்கள் உள்ளே வருகை தந்திருக்கும் வேலையில் அவரவர் செய்த பிரச்சனைகளை மட்டுமே பேசுகிறார்கள் . இன்னும் இந்த வீட்டில் என்னெல்லாம் நடக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்ப்போம் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top