Connect with us

கமல்ஹாசனின் ‘இந்தியன்-2’ படத்தின் முதல் பாடல் வெளியானது..!!

Cinema News

கமல்ஹாசனின் ‘இந்தியன்-2’ படத்தின் முதல் பாடல் வெளியானது..!!

கமல்ஹாசனின் கிளாஸான நடிப்பில் உருவாகி உள்ள ‘இந்தியன்-2’ படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கமல்ஹாசன் – ஷங்கர் காம்போவில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி உள்ள திரைப்படம் இந்தியன்-2 .

பல போராட்டங்களை தாண்டி இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது இப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது . இப்படத்தின் முதல் பாகத்திற்கு இசை புயல் இசையமைத்திருந்த நிலையில் இந்தியன் 2 படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார் .

இதுமட்டுமின்றி இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா , காஜல் அகர்வால் என பெரும் நட்சத்திர பட்டாளமே கமிட்டாகி நடித்திருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்துவந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் வெளியாகி உள்ளது.

இந்தியன்-2 படத்தின் முதல் சிங்கிளான ‘பாரா’ என்ற பாடல் பா.விஜய் கைவண்ணத்தில் உருவாகி உள்ளது இப்பாடலை அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். இதுமட்டுமின்றி இப்படத்தின் இசைவெளியீட்டு விழா ஜூன் 1ல் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Bigg Boss Tamil 10: ஜேசனை அதிரவைத்த ரம்யா கிருஷ்ணன்! குறும்படத்தால் மாறிய காட்சிகள்.. முதல் நாளிலேயே அதிரடி காட்டிய தொகுப்பாளர்!

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top