Connect with us

தூக்கத்தில் ஏற்பட்ட துயரம் – பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்..!!

Cinema News

தூக்கத்தில் ஏற்பட்ட துயரம் – பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்..!!

தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் டெல்லி கணேஷ் அவரது 81 ஆவது வயதில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் அபூர்வ சகோதரர்கள் , சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், தெனாலி, அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் தனது யதார்தமான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் டெல்லி கணேஷ் .

இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் தனது அசத்தலான நடிப்பால் பல விருதுகளையும் வென்று குவித்துள்ளார்.

வயது முத்திருந்தபோதிலும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவரது நடிப்பில் கடைசியாக ரத்னம், அரண்மனை 4, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூக்கத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தனது நடிப்பால் மக்களை மகிழ்வித்து வந்த நடிகர் டெல்லி கணேஷின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் , திரைபிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'ஸ்குவிட் கேம்' 2 வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top