Connect with us

அடுத்தடுத்து வீழ்ந்த இந்திய பேட்ஸ்மேன்கள் – தென்னாப்பிரிக்கா அணிக்கு 125 ரன்கள் இலக்கு..!!

Featured

அடுத்தடுத்து வீழ்ந்த இந்திய பேட்ஸ்மேன்கள் – தென்னாப்பிரிக்கா அணிக்கு 125 ரன்கள் இலக்கு..!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அங்கு டி20 தொடரில் விளையாடி வருகிறது . இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி அபார வெற்றியுடன் தொடரை தொடங்கியது.

இதையடுத்து செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இரு அணிகளும் களம் கண்டுள்ளது . இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

கடந்த போட்டியை போல் அதிரடி காட்டுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க . மறுபுறம் விளையாடிய அபிஷேக் ஷர்மாவும் 4 ரன்களில் நடையைக்கட்டினார்.

இவர்களை தொடர்ந்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் வந்தவுடன் வந்தவளியிலேயே செல்ல அடுத்து வந்த திலக் மற்றும் அக்சர் படேல் சற்று நிதானம் காட்ட அவர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா இறுதிவரை போராட 20 ஓவர்கள் முடிவில் 6 ;விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 124 ரன்கள் மட்டுமே எடுத்து . இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top