Connect with us

சூப்பர்ஸ்டாரை விமானத்தில் சந்தித்த பிரபல நடிகை – இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ..!!

Cinema News

சூப்பர்ஸ்டாரை விமானத்தில் சந்தித்த பிரபல நடிகை – இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ..!!

இந்திய சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் மோடி முதல் அம்பானி வரை தலைவரின் நட்பு வட்டாரம் மிக மிக பெரியது.

அதனை அம்பானி வீட்டு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் இருந்த இவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தெள்ளத்தெளிவாக சொல்லிவிட்டது .

இப்படி நாடு முழுவதும் செல்வாக்கு மிக்க மனிதராக வலம் வரும் ரஜினியை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என திரை நட்சத்திரங்களே காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று ரஜினி விமானத்தில் செல்லும்போது அவரது அருகில் நடிகை நிக்கி கல்ராணி வந்திருக்கிறார். அவருடன் எடுத்த போட்டோவை நிக்கி நெகிழ்ச்சியாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

இதுமட்டுமின்றி ரஜினிகாந்த் அவர்களின் விமான டிக்கெட்டை வாங்கி அவரிடமே ஆட்டோகிராப்பும் வாங்கியுள்ளார் நடிகை நிக்கி கல்ராணி.

இதற்கு ரீயாக்ட் செய்துள்ள அவரது கணவரும் நடிகருமான ஆதி இந்த பொன்னான வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இவர்களது புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top