Connect with us

விஜய்யுடன் மீண்டும் கைகோர்க்கும் நடிகை த்ரிஷா..? வெளியான டக்கர் தகவல்..

Cinema News

விஜய்யுடன் மீண்டும் கைகோர்க்கும் நடிகை த்ரிஷா..? வெளியான டக்கர் தகவல்..

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யுடன் நடிகை த்ரிஷா மீண்டும் கைகோர்க்க இருப்பதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜயின் காம்போவில் இரண்டாவதாக வெளியான திரைப்படம் தான் லியோ பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் உருவான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.

பல வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்த இந்த ஜோடியை திரையரங்குகளில் பார்க்கவே வேற லெவலில் இருந்தது இதுமட்டுமின்றி இந்த படமோ சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க விஜய்யுடன் மீண்டும் எப்போது நடிக்கப்போறிங்க திரிஷா என ரசிக்கரால் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜயின் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் கோட் படத்தில் த்ரிஷா இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்பா, மகன் என இரு வேடங்களில் விஜய் நடித்து வரும் நிலையில் த்ரிஷா ஒரு முக்கிய கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், சினேகா, பிரபு தேவா , லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் வருவது குறிப்பிடத்தக்கது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  150 கோடி வசூலை கடந்தது பிருத்வி ராஜின் ஆடு ஜீவிதம் திரைப்படம்..!!!

More in Cinema News

To Top