Connect with us

‘சூர்யா 45’ படத்தின் பூஜை எப்போது தெரியுமா..? அசத்தல் அப்டேட் இதோ..!!

Cinema News

‘சூர்யா 45’ படத்தின் பூஜை எப்போது தெரியுமா..? அசத்தல் அப்டேட் இதோ..!!

RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போகும் அவரது 45 ஆவது படத்தின் பூஜை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் டாப்பு டக்கர் நடிகர்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னணியில் இருப்பவர் நடிகர் சூர்யா . இவரது நடிப்பில் தற்போது அவரது 44ஆவது திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பும் அண்மையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது .

இந்நிலையில் சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்த நிலையில் அந்த படத்தை RJ பாலாஜி இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து இந்த படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது இதுகுறித்த அசத்தலான தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பூஜை நாளை கோவையில் நடைபெறவுள்ளது என்றும் இதனை தொடர்ந்து நவ.28ம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top