Connect with us

ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகர் யோகி பாபு – வெளியானது தாறுமாறு தகவல்..!!

Cinema News

ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகர் யோகி பாபு – வெளியானது தாறுமாறு தகவல்..!!

தமிழ் சினிமாவில் கலக்கல் நாயகனாக வலம் வந்த நடிகர் யோகி பாபு தற்போது ஹாலிவுட்டில் கால் பதிக்க உள்ளதாக தாறுமாறான தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் இருக்கும் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் யோகி பாபு . நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து கலக்கி வரும் இவர் தற்போது ஹாலிவுட்டில் கால் பதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சியை சேர்ந்த டெல் கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘Trap City’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நடிகர் யோகி பாபு அறிமுகமாக உள்ளக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ், பிராண்டன் டி.ஜாக்சன், ஜே ஜீஸி ஜென்கின்ஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது நடிகர் யோகி பாபுவும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  3 நாட்களில் 'படைத்தலைவன்' செய்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

More in Cinema News

To Top