Connect with us

ரஜினியை சங்கியல்ல எனக் குறிப்பிட்டது விளம்பரத்திற்காக அல்ல – மகள் ஐஸ்வர்யா விளக்கம்

Aishwarya_Rajinikanth

Cinema News

ரஜினியை சங்கியல்ல எனக் குறிப்பிட்டது விளம்பரத்திற்காக அல்ல – மகள் ஐஸ்வர்யா விளக்கம்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியை சங்கி அல்ல எனக் கூப்பிட்டது விளம்பரத்திற்காக அல்ல என அவரது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் என்ற படத்தை எடுத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா, சமுக வலைதளங்களில் பலரும் தனது தந்தையை சங்கி எனக் கூறி வந்தாலும் அவரை சங்கி என சொல்வது தனக்கு பிடிக்கவில்லை என்றார். மேலும். அவர் சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க முடியாது எனக் கூறியிருந்தார்.

முன்னதாக, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்றதால் அவர் மீது வந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாகவே அவர் இதைக் கூறியதாக கூறப்பட்டது. அதேநேரம் லால் சலாம் படத்தின் விளம்பரத்திற்காக அவர் இதை பேசியுள்ளார் என்றும் ஒரு தரப்பினர் விமர்சித்து வந்தனர்.

இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ‘லால் சலாம்’ திரைப்பட குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஐஸ்வர்யா, தான் எங்கேயும் சங்கி என்பது தவறான வார்த்தை என்பது போல் கூறவில்லை என்றும், இசை வெளியீட்டு விழாவில் பேசியது விளம்பர யுக்திக்காக இல்லை என்றும் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்களும் படத்தில் பணிபுரிந்து குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!

More in Cinema News

To Top