Connect with us

எந்த அப்டேட்டும் காணோமே ஏன்..? தலைவர் 171 குறித்து லோகேஷ் கனகராஜ் பேச்சு

Rajinikanth_Lokesh_Kanagaraj

Cinema News

எந்த அப்டேட்டும் காணோமே ஏன்..? தலைவர் 171 குறித்து லோகேஷ் கனகராஜ் பேச்சு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜே இதை வெளியிட்டுள்ளார்.

தனது முதல் படமான மாநகரம் மூலம் ரசிகர்களை கவர்ந்த லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என இந்திய சினிமாவையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

இதனால் லியோ படத்திற்கு பிறகு அவர் பாலிவுட் பக்கம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

ஆனால், அதன் பிறகு கிணற்றில் போட்ட கல்லாக படம் குறித்த எந்த அப்டேட்டும் வராததால், படம் டிராப் செய்யப்பட்டு விட்டதா என்ற பேச்சுக்களும் எழத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், படம் குறித்து பேசியுள்ள லோகேஷ் கனகராஜ் படத்திற்கான கதையை எழுதி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொடர்ந்து ரஜினிகாந்துடன் பேசி வருவதாகவும், படத்தின் ப்ரீ புரடக்ஷன் இன்னும் மூன்று மாதங்களில் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வொரு காட்சியும் தரம் - வெளியானது கவினின் ஸ்டார் படத்தின் ட்ரைலர்..!!!

More in Cinema News

To Top