Connect with us

“என் மகன் யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கையை தோனி அழித்துவிட்டார்” – யோக்ராஜ் சிங் ஆவேசம்

Featured

“என் மகன் யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கையை தோனி அழித்துவிட்டார்” – யோக்ராஜ் சிங் ஆவேசம்

என் மகன் யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கையை தோனி அழித்துவிட்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக வலம் வந்த யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் ஆவேசமாக பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக வலம் வந்தவர் யுவ்ராஜ் சிங் உள்நாட்டு போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள் வரை ஏராளமான சாதனைகளை படைத்துள்ள யுவராஜ் சிங் புற்று நோயால் பாதிக்கப்பட்டு பின்னர் அதில் இருந்தும் மீண்டு வந்து தாய் நாட்டிற்காக தொடர்ந்து விளையாடி வந்தார்.

இந்நிலையில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ள யுவராஜ் சிங் தனது சொந்த வேளைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இப்படி இருக்கும் சூழலில் தனது மகன் யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கையை தோனி அழித்துவிட்டதாக அவரின் தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங் ஆவேசம் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.தோனியை நான் மன்னிக்கவே மாட்டேன். என் மகன் யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கையை அவர் அழித்துவிட்டார். இந்திய அணிக்காக மேலும் 5 ஆண்டுகள் வரை யுவ்ராஜ் விளையாடியிருப்பார். அதை தோனி கெடுத்துவிட்டார்.

யுவ்ராஜ் சிங் போல மற்றொரு வீரர் கிடைக்க மாட்டார் என கம்பீர், சேவாக் போன்றோர் கூறியுள்ளனர் இருப்பினும் அவரின் விளையாட்டு திறனை தோனி மதிக்காமல் போனது வருத்தம் அளிக்கிறது என யோக்ராஜ் சிங் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை தடுக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்..!!

More in Featured

To Top