Connect with us

தனுஷ் இயக்கி, நடிக்கவுள்ள ‘D50’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டது படக்குழு.!!

Cinema News

தனுஷ் இயக்கி, நடிக்கவுள்ள ‘D50’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டது படக்குழு.!!

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்க உள்ள D50 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்திய சினிமவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்ணிட்டு வெளியான படம் கேப்டன் மில்லர் எதிர்பார்ப்பை மிஞ்சிய வசூலை ஈட்டி வெற்றி படமாக உருமாறியது.

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றிருந்த போதிலும் வசூலில் பட்டய கிளப்பியதாக திரை துறை வட்டாரங்கள் மத்தியிலும் அழுத்தமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் ஒரு பக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் மீண்டும் தனது டைரக்டர் பணியை இனிதே தொடக்கி உள்ளார்.

அந்தவகையில் தற்போது நடிகர் தனுஷின் 50 ஆவது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார் . ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தி சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கவுள்ள ‘D50’ படத்தின் First Look வரும் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகும் என ஒரு சிறப்பான போஸ்டர் மூலம் பட நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போடு வெறித்தனம் வெறித்தனம் - வெளியானது தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர்..!!!

More in Cinema News

To Top