Connect with us

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தின் Second Look போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தின் Second Look போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

எஸ்.கே.வின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள SK21 படத்தின் தலைப்பு மற்றும் டீஸர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று இப்படத்தின் 2nd லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் SK21 .

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடித்துள்ளதுள்ளார் . இதுமட்டுமின்றி இந்த படத்தில் எஸ்.கே மற்றும் சாய் பல்லவியுடன் சேர்ந்து ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு நீண்ட நாட்களாக ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் என்று இப்படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த டீசர் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக நிச்சயம் அமைந்திருக்கும் .

சிவகார்த்திகேயனின் முரட்டு தனமான நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் வீரமரணமடைந்த சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படம் உருவாகி உள்ளது .

இந்நிலையில் இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அமரன் படத்தின் 2 nd லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெண் வேண்டத்தில் முழு பாடலுக்கு நடனமாடிய கவின் - இணையத்தை கலக்கும் ஸ்டார் படத்தின் மெல்லடி பாடல்..!!!

More in Cinema News

To Top