Connect with us

CWC FINAL : பேட்டிங்கில் மிரட்டுமா இந்திய அணி..? ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு..

CWC23

CWC FINAL : பேட்டிங்கில் மிரட்டுமா இந்திய அணி..? ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு..

இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலககோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார் .

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று பிற்பகல் கோலாகலமாக நடைபெற உள்ளது . உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஏரளாமான கலை நிகழ்ச்சிகளுடன் இந்த இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம்மில்லாமல் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார் .

இதையடுத்து இந்த இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்ய உள்ளது.

இதுவரை 7 முறை உலகக்கோப்பை இறுதி போட்டியில் விளையாடி உள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டியில் வெற்றிபெற்றுள்ளது . அதே சமயம் இதுவரை 3 முறை உலகக்கோப்பை இறுதி போட்டியில் விளையாடியுள்ள இந்திய 2 முறை வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் அனல் பறக்க இன்று நடைபெறும் இந்த உலகக்கோப்பை இறுதி போட்டியில் எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது எந்த தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

Advertisement
 

Trending

 
Advertisement
To Top