Connect with us

“சர்ச்சை வரிகளுடன் வெளியானது LEO படத்தின் நா ரெடி பாடல் Video!”

Cinema News

“சர்ச்சை வரிகளுடன் வெளியானது LEO படத்தின் நா ரெடி பாடல் Video!”

தளபதி விஜய் கேரியரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக உருவானது லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய், பார்த்திபன், லியோ என இரண்டுவிதமான தோற்றங்களில் நடித்திருந்தார். விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. கடந்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான லியோ உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

அதேபோல் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்த வாரம் ஓடிடியிலும் லியோ வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது லியோ படக்குழு. அதன்படி நான் ரெடி பாடலின் முழுமையான வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது.

லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான நான் ரெடி பாடலை அனிருத் இசையில் விஜய் பாடியிருந்தார். 2000 குரூப் டான்ஸர்களுடன் அதிரடியாக ஆட்டம் போட்டிருந்தார் விஜய். அவருடன் மடோனா செபாஸ்டியன், அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோரும் தெறிமாஸ் காட்டியிருந்தனர். திரையரங்குகளில் நான் ரெடி பாடல் தான் ரசிகர்களின் கொண்டாட்டமாக அமைந்தது. இந்நிலையில், தற்போது நான் ரெடி பாடலின் முழு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. எதிர்பார்த்ததை போலவே ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது நான் ரெடி பாடலின் முழு வீடியோ.

அதேநேரம், நீதிமன்றம் வரை சென்று நீக்கப்பட்டிருந்த சர்ச்சையான வரிகள், தற்போது வெளியான வீடியோவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது “வெரல் எடுக்குற தீ பந்தம் நா ஏந்தத்தான்… பாத்தாது பாட்டில் நா குடிக்க ஆண்டாள கொண்டா சியர்ஸ் அடிக்க” என்ற வரிகள், புகை பிடிப்பது, மது அருந்துவதை உற்சாகப்படுத்துவதை போல இருப்பதாக பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. பின்னர் அந்த வரிகளை மாற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதால், படத்தில் எடிட் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியான முழு வீடியோவில் அந்த சர்ச்சையான வரிகள் அப்படியே இடம்பெற்றுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top