Connect with us

ஏல வெடிய போடுங்கல : நடப்பு ஐபிஎல் தொடருக்காக எம்.எஸ்.தோனியை அணியில் தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!

Featured

ஏல வெடிய போடுங்கல : நடப்பு ஐபிஎல் தொடருக்காக எம்.எஸ்.தோனியை அணியில் தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக கேப்டன் எம்.எஸ்.தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி ரசிகர்களை செம சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளதால் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் தங்கள் அணியின் சில வீரர்களை விடுவித்து கொள்ளவும் சில வீரர்களை தக்கவைத்து கொள்ளவும் அணைத்து அணிகளுக்கும் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களின் பெயர்களை தற்போது ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டு வருகின்றன .

அந்தவகையில் 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக கேப்டன் எம்.எஸ்.தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி ரசிகர்களை செம சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து பென் ஸ்டோக்ஸை , டுவைன் பிரெட்டோரியஸ், அம்பதி ராயுடு, சிசாண்டா மகாலா, கைல் ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகியோரையும் தங்களது அணியில் இருந்து சிஎஸ்கே விடுத்துள்ளது.

யார் போனாலும் யார் வந்தாலும் நம்ப தல தோனி இந்த முறை விளையாடுறாருப்பா அதுவும் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்கிறார்பா என்று தோனி மற்றும் சென்னை அணியின் ரசிகரக்ள் குஷியில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top