Connect with us

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் பக்தர்களின் ஆரவாரத்துடன் ஏற்றப்பட்டது மகா தீபம்..!!

Devotional

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் பக்தர்களின் ஆரவாரத்துடன் ஏற்றப்பட்டது மகா தீபம்..!!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது ஆயிரக்கணக்கான பக்கதர்களின் முழக்கத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது . அந்தவகையில் இந்த ஆண்டும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

இந்நிலையில் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீது மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுள்ள.

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை தயார் செய்யப்பட்டு சரியாக மாலை 6 மணிக்கு பகதர்க்கின் ஓம் நமச்சிவாய என்ற முழக்கத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.

பக்தி பரவசமூட்டும் இந்த இந்த நிகழ்வை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் தற்போது ஜோதி தரிசனத்தை நேரில் காண குவிந்துள்ளனர்.

இந்த நிகழ்வின்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்களின் பிரிவு குறித்து வரும் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் ஏற்புடையதல்ல - மீண்டும் ஒரு வேதனைப் பதிவை போட்ட ஜி.வி.பிரகாஷ்..!!

More in Devotional

To Top