Connect with us

ஐபிஎல்-ல் வரலாற்று சாதனை படைத்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்..!!!

Featured

ஐபிஎல்-ல் வரலாற்று சாதனை படைத்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் CSK – LSG அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் CSK அணிக்கு எதிராக டாஸ் வென்ற LSG அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச முடிவு செய்தார் . இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணி பேட்டிங் செய்தது.

சென்னையின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் களமிறங்கினர். இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே எளிமையான கேட்ச் கொடுத்து 1 ரன்னில் வெளியேறினார்.

இஹையடுத்து வந்த மிட்சலும் 11 ரன்களில் வெளியேற அடுத்ததாக ஜடேஜா களத்திற்கு வந்தார். ஒரு பக்கம் ருதுராஜ் அதிரடியாக ஆட மறுபக்க ஜடேஜா சற்று மந்தமாகவே களத்தில் காணப்பட்டார். ஒருகட்டத்தில் அவரும் 16 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து துபே மற்றும் ருதுராஜ் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியில் மிரட்டினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்த. அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் சதம் விளாசி மைதானத்தை அலறவிட்டார்.

இந்த பக்கம் சிக்ஸர்களாக விளாசிய துபே 66 ரன்களில் வெளியேற கடைசி இரு பந்துகள் இருக்கும் நிலையில் தோனி களத்திற்கு வந்தார் . பின்னர் ஒரு சிங்கள் எடுத்த ருதுராஜ் ஸ்ட்ரிக்கை தோனியிடம் கொடுக்க தோனி அதனை பவுண்டரியுடன் முடித்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்த சென்னை அணி 210 ரன்கள் குவித்தது. இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி பேட்டிங் செய்தது .

லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் டிகாக் களமிறங்கினர் . இதில் நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிகாக் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். இதையடுத்து 5-வது ஓவரில் கே.எல்.ராகுல் தனது விக்கெட்டை 16 ரன்களில் இழந்தார்.

அதன் பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் அதிரடியில் மிரட்ட அவருக்கு பக்கபலமாக நிக்கோலஸ் பூரன் பொறுப்புடன் ஆடி வந்தார் . அப்போது 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நேரத்தில் தனது விக்கெட்டை இழந்து பூரன் வெளியேறினார்.

See also  அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்திடுக - தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கோரிக்கை..!!

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் நிலைத்து நின்று ஆடிய ஸ்டாய்னிஸ். 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார் . அவரது அபார ஆட்டத்தால் ஆட்டம்கண்ட சென்னை செய்வதறியாது திணறி நின்றது.

இதையடுத்து 19.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்த லக்னோ அணி 213 ரன்கள் எடுத்தது கெத்தான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக சதமடித்த முதல் கேப்டன் என்ற வரலாற்று சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top