Connect with us

குஷ்பு ஒரு சிறந்த…ஆகச்சிறந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார்…காங்கிரஸ் கமிட்டி கண்டனம்!

Politics

குஷ்பு ஒரு சிறந்த…ஆகச்சிறந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார்…காங்கிரஸ் கமிட்டி கண்டனம்!

பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவை கண்டித்து வருகின்ற திங்கள் கிழமை அவரது வீடு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே அவரின் முன் பல போலீஸ் கட்டுப்பாடுகள் இருப்பது அறிந்த ஒன்றாகும்…இப்போது போராட்டம் வேற நடத்த பட இருக்கின்றதாம்,..

தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.பி.பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறந்த நடிகை என்பதை குஷ்பு தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார் குஷ்பு ஒரு நல்லவர் நல்ல மனிதர்,மனசாட்சி உள்ள நபராக இருந்தால் தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருப்பார் அப்படி இல்லை என்பது தான் தெரிகின்றது.

இந்தப் பிரச்சினையைத் தொடங்கிய நடிகர் மன்சூரலிகானே மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடித்து வைத்துவிட்டார்…

அது சரியாகிவிட்டது…அப்படி இருந்தும் தொடர்ந்து சேரி என்ற வார்த்தை அர்த்தங்களைத் தேடும் வேலையில் தான் குஷ்பூ ஓடிக்கொண்டு வருகின்றார் வேளச்சேரி,செம்மஞ்சேரி என்றெல்லாம் பெயர் இருப்பதாக கூறி மீண்டும் சப்பைக்கட்டு கட்டும் வேலையைச் செய்திருக்கிறார்..அவருக்கு பயம் அதனால் தான் இப்படி சமாளிக்கிறார் என சொல்லி இருக்கின்றார் ரஞ்சன்..

மன்னிப்பு கேட்க மறுக்கும் குஷ்புவை கண்டித்து அவர் வீட்டின் முன்பு திங்கட்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி எஸ்டி பிரிவின் சார்பில் எபோராட்டம் நடத்த உள்ளோம்..அவரின் மன்னிப்பு தான் எங்கள் தேவை..அவர் உண்மை சொன்னால் போதுமானது என சொல்லி இருக்கின்றார் ரஞ்சன்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Politics

Advertisement
 

Trending

 
Advertisement
To Top