Connect with us

“கொள்கை வீரர்களை உருவாக்க வேண்டியது உங்கள் கடமை” – திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

Featured

“கொள்கை வீரர்களை உருவாக்க வேண்டியது உங்கள் கடமை” – திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

கொள்கை வீரர்களை உருவாக்க வேண்டியது உங்கள் கடமை என திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இன்று கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

எந்த எதிர்பார்ப்புமின்றி கழகத்திற்காக உழைக்கும் தொண்டர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக பத்து அல்லது பதினைந்து இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை.

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிதான்; மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்கள் வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன்.

நிர்வாகிகள் அவரவர் குடும்பத்திற்கும் நேரத்தை செலவிடுங்கள்; தொழில் செய்பவர்களாக இருந்தால் அதற்கும் கவனம் செலுத்துங்கள் அதே சமயம் ஒருநாளில் இரண்டு மணி நேரத்தை கட்சிக்காக ஒதுக்குங்கள். வார இறுதியில் ஒரு நாளை முழுமையாக கழகப்பணிக்கு ஒதுக்குங்கள் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டான்ஸ் ஜோடி டான்ஸ் மேடையில் மணிமேகலையின் புதிய அவதாரம் – சும்மா கெத்து காட்றாங்களே!

More in Featured

To Top