Connect with us

இது எனக்கு மிகவும் நெருக்கமான படம் – அமரன் வெற்றி விழாவில் கண்கலங்கியபடி பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்..!!

Cinema News

இது எனக்கு மிகவும் நெருக்கமான படம் – அமரன் வெற்றி விழாவில் கண்கலங்கியபடி பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்..!!

அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கண்கலங்கியபடி பேசிய வீடியோ வைரலாக வலம் வருகிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , சாய்ப் பல்லவி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்களின் ஆத்மார்த்தமான நடிப்பில் உருவான திரைப்படமே அமரன்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான நிலையில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் கண்கலங்கியபடி பேசியுள்ளார்.

நான் அமரன் படத்தில் நடித்ததற்கு மிக முக்கிய காரணம் என் அப்பா தான். அவர் சிறை கண்காணிப்பாளராக இருந்தவர். தன் பணியில் மிகவும் நேர்மையானவராக இருந்தவர்.

கடந்த 21 ஆண்டுகளாக அவருடைய நினைவில் மட்டும் தான் நான் வாழ்ந்து வருகிறேன். ஆனால் இந்த படம் மூலம் அவரை மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

முகுந்த் போன்று தான் என் தந்தையும். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடந்தது போன்று தான் என் வாழ்க்கையிலும் நடந்தது. என் அம்மா மற்றும் அக்காவுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். தற்போது இந்த படத்தில் நடித்து அதை பூர்த்தி செய்து விட்டேன் என நம்புவதாக நடிகர் சிவகார்த்தியேகன் கண்கலங்கியபடி பேசியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நயன்தாரா - தனுஷ் இடையே சட்டப்போர்: ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரம்!

More in Cinema News

To Top