Connect with us

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்தை மனம் நெகிழ பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்..!!

Cinema News

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்தை மனம் நெகிழ பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்..!!

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ள நிலையில் இப்படத்தை கண்டுகளித்த முதல்வர் ஸ்டாலின் மனதார பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, #அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல் – திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மேஜர் முகுந்த் வரதராஜன் – திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக செயல்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன் , சாய்பல்லவி அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!

நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும் நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute! என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சமூக வலைத்தளத்தை அதிரவைத்த பூஜா ஹெக்டே ‘மோனிகா’ பாடல்..

More in Cinema News

To Top