Connect with us

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் அப்டேட் கொடுத்தது படக்குழு..!!

Cinema News

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் அப்டேட் கொடுத்தது படக்குழு..!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி உள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி . இவரை போலவே இவரது மகனும் தெலுங்கு திரையுலகில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் .

இந்நிலையில் இவரது நடிப்பில் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படமே தி கேம் சேஞ்சர்.

சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ராம் சரனுடன் , கியாரா அத்வானி , எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை திரையரங்குகளில் காண அனைவரும் ஆவலாக காத்திருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் டீஸர் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் வரும் நவம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top