Connect with us

சென்னை மெட்ரோ ரயிலில் ₹5 கட்டணத்தில் பயணிக்கலாம் – சிறப்பு சலுகை கொடுத்த மெட்ரோ நிர்வாகம்

Featured

சென்னை மெட்ரோ ரயிலில் ₹5 கட்டணத்தில் பயணிக்கலாம் – சிறப்பு சலுகை கொடுத்த மெட்ரோ நிர்வாகம்

வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பித்த நாள் இன்று வரை சென்னை வாசிகள் பெரும்பாலானோர் அதிகளவில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது . அதன்படி வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி (ஞாயிறு) ஒருநாள் மட்டும் ₹5 ரூபாய் கட்டணத்தில் பொதுமக்கள் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது .

Static QR, Paytm, whatsapp Phonepe மூலம் எடுக்கும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூ.ஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாள்தோறும் ஏராளமானோர் மெட்ரோ ரயிலில் பயணித்து வரும் நிலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ள இந்த சிறப்பு சலுகைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  IPL 2024 : தொடர் தோல்வியில் இருந்து மீளப்போவது யார்..? டெல்லியுடன் குஜராத் இன்று மோதல்..!!!

More in Featured

To Top